‘இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது’: பிரதமர் மோடி காட்டம் 

இந்து மன்னர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை கடுமையாக சாடியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்து மன்னர்களை அவமதித்ததாகவும், ஆனால், ஔரங்கசீப் போன்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் செய்த அட்டூழியங்களுக்கு வாய் திறக்காமல் இருப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இதை தெரிவித்துள்ளார்.
“நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி ஷெஹ்சாதா(ராகுல் காந்தி) ஒரு வார்த்தை கூட பேசவில்லை. …” என்று பிரதமர் கூறியுள்ளார்.
ஒரு வைரல் வீடியோவில் ராகுல் காந்தி கூறிய கருத்துக்களை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

You May Also Like

More From Author