ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே  

Estimated read time 1 min read

பொதுவாக, நீண்ட தூர எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் அமர்ந்தோ, தொங்கியபடியோ பயணம் செய்வது வழக்கமாகி விட்டது.
ஆனால், இத்தகைய சாகசமான பயணங்கள், பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக இருக்கலாம் என்பதே ரயில்வேவின் கவலையாக உள்ளது.
இதனால் சகபயணிகளுக்கும் தொந்தரவு ஏற்படுவதாக புகார்கள் எழுதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்த நிலையில், இது தொடர்பாக, தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 156ன் கீழ், படிக்கட்டுகளில் அமர்ந்து அல்லது தொங்கியபடி பயணிக்கும் நபர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author