ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அக்டோபர் 5ஆம் தேதி முடிவடைந்தன.
வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18 (24 இடங்கள்), 25 (26 இடங்கள்), மற்றும் அக்டோபர் 1 (40 இடங்கள்) என மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது.
பாஜக, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) ஆகியவை ஹரியானாவில் முக்கியமான கட்சிகளாகும்.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை பிரதான கட்சிகளாகும்.