லாவோஸ் மக்கள் புரட்சி கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான தோங்லூன் ஜுன் 2 முதல் 6ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இது குறித்து சீனா, லாவோஸ் ஆகிய இரு நாடுகளும் சர்வதேச சமூகமும் ஆக்கப்பூர்வ மதிப்பீடு செய்துள்ளன. இப்பயணத்தின் போது, சீனா-லாவோஸ் உறவை புதிய நிலைக்கு முன்னேற்றவும், புதிய யுகத்தில் அனைத்து நிலையிலான சீனா-லாவோஸ் பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக உருவாக்கவும் இருநாடுகளின் அதியுயர் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இது, புதிய வரலாற்றின் துவக்கப் புள்ளியில் இரு கட்சிகள் மற்றும் இருநாடுகளின் உறவு வளர்ச்சிக்கு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது என்றும், இது இருநாட்டுறவையும் அவற்றின் தனித்துவம் வாய்ந்த நவீனமயமாக்க பணிகளையும் புதிய கட்டத்துக்கு முன்னெடுத்துச் சென்று, மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்கு முன்மாதிரியாக திகழும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உலக நிலைமை மாறி வரும் சூழலில், சீனாவும் லாவோஸும் வளர்ச்சிக்கான புதிய கடமைகளை எதிர்நோக்குகின்றன. புதிய நிலைமையில் இருநாட்டுறவையும் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தையும் உயர் நிலைக்கு எவ்வாறு முன்னேற்றுவது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சோஷலிய வாதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும், மக்களிடையே பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்த வேண்டும், வெளியுறவு கொள்கையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த கருத்துக்கள் இருநாட்டுறவின் வளர்ச்சிக்கு உத்திநோக்கு வழிகாட்டலை வழங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
சீனாவும் லாவோஸும் இருதரப்பு உறவின் நிலையை உயர்த்துவது, இருநாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டிருப்பதோடு, உலகிற்கு நன்மை தரும் விருப்பத்தையும் கொண்டுள்ளது. சீனா-லாவோஸ் பொது எதிர்கால சமூகம், இருநாடுகளின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளையும், பிரதேச அமைதி மற்றும் செழுமைக்கு புதிய இயக்காற்றலையும் அளிக்கும்.
