சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதிய ஒப்பந்த விதிகளால் 700 க்கும் மேற்பட்ட லாரிகளுக்குப் பணி வழங்கப்படாததைக் கண்டித்து, தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வியாழக்கிழமை (அக்டோபர் 9) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனால், மொத்தம் 5,500க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சமையல் எரிவாயு என்பது அத்தியாவசியப் பொருள் என்பதால், அதன் விநியோகத்தைத் தடுப்பது சட்டவிரோதமானது என்று ஐஓசிஎல் சுட்டிக்காட்டியுள்ளது.
சமையல் எரிவாயு டேங்கர் லாரி வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு
