15வது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டம் பஞ்சுல் நகரில் நடைபெற்றதற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 4ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சர்வதேச நேர்மையைப் பேணிக்காப்பதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவும், இஸ்லாமிய நாடுகளும் ஒன்று மற்றதன் மைய நலன்களுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, செழுமையான சாதனைகளைப் பெற்று, தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் முன்மாதிரியாக விளங்கியுள்ளன.
இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, நாகரிகப் பரிமாற்றத்தை விரிவுப்படுத்தி, மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற சீனா விரும்புகிறது என்றார்.