உலக வளர்ச்சி முன்மொழிவு, உலக பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு மற்றும் உலக ஆட்சி முறை முன்மொழிவு முதலிவற்றை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்துள்ளார். இது குறித்து, செர்பியா தலைமையமைச்சர் டுரோ மாகுட் சீன ஊடக குழுமத்திற்குப் பேட்டியளித்த போது கூறுகையில்,
உலக ஆட்சி முறை, பொது எதிர்கால சமூகம் மற்றும் சர்வதேச உறவு குறித்த சீனாவின் முன்மொழிவுகள், ஐ.நாவின் சாசனத்தின் அம்சங்களை செழுமைப்படுத்தியுள்ளன. சீனாவின் முன்மொழிவுகள் தற்போதைய உலகின் முன்னேற்றப் போக்கிற்கு ஏற்ப ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக விளங்குகிறன. சீன அரசு தலைவரின் முன்மொழிவுகள், சரிசமமான பார்வையுடன் முன்வைக்கப்பட்டன. உலக ஆட்சி முறை முன்மொழிவின்படி, எல்லா நாடுகளின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். உலகின் தெற்குலக நாடுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய நாடுகளின் தேவைகளை அறிந்துகொண்டு, இவற்றையும் வளரும் நாடுகளின் நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். திறமைசாலி மூலவளம், பொருளாதார மூலவளம், ஆட்சி முறை அனுபவங்கள் உள்ளிட்டவற்றின் பங்குகளை ஆராய்ந்து, பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றார்.
