ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்

ஒரு சிறப்பு ஷெஹ்னாய் இசை, நாட்டுப்புற இசை, காசியின் பிரபலங்களை பற்றி போற்றும் பாடல்கள், பேண்ட் வாத்தியங்கள்- பிரதமர் நரேந்திர மோடி, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14 அன்று தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று வாரணாசியில் அவரது ஐந்து கிலோமீட்டர் தூர ரோடு ஷோ நடைபெறவுள்ளது.
அதில் மினி இந்தியா மற்றும் உத்தரபிரதேச கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பல விஷயங்கள் இடம்பெறவுள்ளன.
நாளை, மே 14ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 11:40 மணிக்கு பிரதமர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார்.
இது இந்து பஞ்சாங்கத்தின்படி, ‘அபிஜித் மஹுரத்’ மற்றும் ‘ஆனந்த் யோகம்’ ஆகியவற்றின் கீழ் வருவதால் இது நல்ல நேரமாக கருதப்படுகிறது.

You May Also Like

More From Author