மோடி தலைமையிலான 11 ஆண்டு கால பாஜக ஆட்சி பொற்காலம் : அமித்ஷா

Estimated read time 1 min read

பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுக் கால பாஜக ஆட்சி பொற்காலம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 3வது ஆட்சிக் காலத்தின் முதலாம் ஆண்டு இன்றுடன் நிறைவடைகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் 3-வது பதவிக் காலத்தில், இந்தியா சீரமைப்பு, செயல்திறன் உள்ளிட்டவற்றால் வளர்ச்சி மற்றும் சுயச்சார்பு பாதையில் வேகமாக முன்னேறுகிறது எனத் தெரிவித்தார்.

மேலும், பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, கலாச்சார பெருமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றில், புதிய அத்தியாயத்தை இந்த நாடு கண்டு வருகிறது எனவும் அமித்ஷா கூறினார்.

You May Also Like

More From Author