டெல்லியில் விமானத்தில் தீ விபத்து!

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமானம் மாலை 5.52 மணிக்குப் புறப்பட்டது.

அப்போது அதன் ஏசி பகுதியில் திடீரென தீப்பிடித்தது. விபரீதத்தை உணர்ந்த விமானி, கட்டுப்பாட்டுக்கு அறைக்குத் தகவல் அளித்து மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார்.

உடனடியாக 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்த 175 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

You May Also Like

More From Author