ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

Estimated read time 0 min read

ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

தொடர்ந்து நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்தது அபிஷேகத்திற்கு பின்னர் நெய் அபிஷேகம் தொடங்கும். 7:30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும் கார்த்திகை 1 முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வதற்கான மேல் சாந்தி தேர்வு நடைபெறுகிறது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்தவர்களின் பட்டியலில் உள்ள பெயர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

You May Also Like

More From Author