ஈரானில் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலி!

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலியாகினர். ஈரானின் கடந்த சில தினங்களாக இயல்பை காட்டிலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கொரசன் ரசவி மாகாணம் மசாத் நகரில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கி உயிரிழந்த 2 பேர் உள்பட ஈரானில் கனமழைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போன 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடத்து வருகிறது.

You May Also Like

More From Author