சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து!

சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிசி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள ஏடிசி கட்டடத்தின் 3வது மாடியில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

You May Also Like

More From Author