சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சூயேசியாங், 8ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் 2025ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சர்வதேச அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு விருது பெற்ற 9 வெளிநாட்டு நிபுணர்களைச் சந்தித்து, பதக்கங்களை வழங்கினார்.
சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் புத்தாக்க வளர்ச்சிக்கும் அவர்கள் ஆற்றிய முக்கியப் பங்கிற்கு, சீன அரசின் சார்பில் டிங் சூயேசியாங் நன்றி தெரிவித்தார். மேலும், சீன அறிவியலாளர்களுடன் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, அறிவியல் தொழில்நுட்பச் சிரமங்களைக் கூட்டாகச் சமாளித்து, மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவதை முன்னேற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
1995 ஆண்டு அதிகாரப்பூர்வமாக இவ்விருது வழங்கத் தொடங்கி, இதுவரை 155 வெளிநாட்டு நிபுணர்கள், 3 சர்வதேச அமைப்புகள் மற்றும் ஒரு வெளிநாட்டு அமைப்பு ஆகியவை இந்தப் பெருமையைப் பெற்றுள்ளன.
