சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 2024ஆம் ஆண்டு சீனா· AI விழா

மே 22ஆம் நாள் சீன ஊடகக் குழுமம், சீன மத்திய இணைய தகவல் அலுவலகம், குவாங்துங் மாநில அரசு ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்த 2024ஆம் ஆண்டு சீனா·

AI துவக்க விழா ஷென்ச்சேன் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

சீன ஊடகக் குழுமம் செயற்கை நுண்ணறிவு தொழில்துறையின் வளர்ச்சி பற்றிய வெள்ளையறிக்கை இதில் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி ஊடக தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பை மேம்படுத்துதல், செய்தி ஊடகங்களின் புத்தாக்கத்தை வழிநடத்துதல், செய்தி ஊடக சூழலை மீண்டும் உருவாக்குதல் ஆகிய மூன்று அம்சங்களில் அறிவியல் பூர்வமாக திட்டமிடுவதை சீன ஊடகக் குழுமம் தெளிவாக முன்வைத்தது. 

செயற்கை நுண்ணறிவின் ஆரோக்கியமான மற்றும் ஒழுங்கான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் நடைமுறை திசையையும் வழங்குவது இதன் நோக்கமாகும்.

You May Also Like

More From Author