ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப பிரச்சனை!- 7 பேர் உயிர் தப்பினர்!

உத்தரகண்டில் தொழில்நுட்ப பிரச்சனையால் புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் 7 பேர் உயிர்தப்பினர்.

கேதார்நாத் கோவிலில் இருந்து 6 பயணிகளுடன் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால் வானில் வட்டமடித்தது.

இதனால், ஹெலிபேடில் நின்ற மக்கள் பதைபதைப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து வட்டமிடித்துக் கொண்டே சென்ற அந்த ஹெலிகாப்டர், சிறிது தூரம் சென்று வானில் நின்றது. பின்னர், ஹெலிபேடில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பத்திரமாக தரையிறங்கியது.

You May Also Like

More From Author