சன்னி தியோல் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) உலகம் முழுவதும் வெளியானது.
அனுராக் சிங் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வருண் தவான், தில்ஜித் தோசன்ஞ் மற்றும் அஹான் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தியா மற்றும் பிற நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்தப் படம், வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகவில்லை.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கருதுவதால், ஆறு வளைகுடா நாடுகள் இந்தப் படத்தை வெளியிட அனுமதி மறுத்துள்ளன.
பார்டர் 2 படத்திற்கு வளைகுடா நாடுகளில் தடை; பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வே காரணம்
