சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் ஷான்தொங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது கூறுகையில், ஷான்தொங் மாநிலம், புதிய வளர்ச்சிச் சிந்தனையைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி, சீர்திருத்தத்தை இயக்காற்றலாக கொண்டு, புதிய வளர்ச்சி நிலைமையுடன் ஒன்றிணைத்து, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான புத்தாக்கத் திறனை வலுப்படுத்த வேண்டும் என்றும், மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கில் உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, கார்பன் குறைந்த பசுமையான உயர்தர வளர்ச்சிக்கான முன்மாதிரி மண்டலத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புக்கான புதிய மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மே 22 முதல் 24ஆம் நாள் வரை, ரிசாவ், ஜீநான் உள்ளிட்ட இடங்களில் ஷி ச்சின்பிங் முறையே ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷான்தொங் மாநில கட்சிக் கமிட்டி மற்றும் ஷான்தொங் மாநில அரசு வழங்கிய பணியறிக்கைகளை ஷி ச்சின்பிங் 24ஆம் நாள் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்கும் தொழில் துறை புத்தாக்கத்துக்குமிடையிலான ஆழமான ஒன்றிணைப்பு, புதிய தர உற்பத்தித் திறனின் வளர்ச்சி, நவீனமயமாக்கத் தொழில் துறையின் மேம்பாடு ஆகியவற்றில் ஷான்தொங் மாநிலம் முயற்சி மேற்கொள்ளத்தக்கது. மேலும், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தில், ஷான்தொங் மாநிலம் பெரும் பொறுப்பேற்க வேண்டும். கிராம வளர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றி, நவீன வேளாண் துறையைப் பெரிதும் வளர்க்க வேண்டும். தவிரவும், பண்பாட்டின் செழுமையான வளர்ச்சியை முன்னேற்றி, சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.