காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்- 35 பேர் பலி!

காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேல்- பாலஸ்தீன போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெற்கு காசா ரஃபா நகரில் பிரத்யேக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 35 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஃபாவில் ராணுவ நடவடிக்கையைக் கைவிடுமாறு சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்திய சில தினங்களில், இஸ்ரேல் இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author