இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பான ‘நேவிக்’ (NavIC – Navigation with Indian Constellation), போதிய செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இயங்காததால் தற்போது தனித்து செயல்படும் திறனை இழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், IRNSS-1F செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்த நிலையில், தற்போது IRNSS-1B, IRNSS-1I, NVS-01 ஆகிய மூன்று செயற்கைக்கோள்கள் மட்டுமே இயங்கி வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
NavIC செயலிழப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டதன் பின்னணி என்ன?
