தமிழ்நாட்டில் ‘எல் நினோ’ (El Niño) வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மழைப்பொழிவு குறைவு குறித்த விரிவான ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு புதிய வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இக்குழுவில் பிரபல வானிலை ஆய்வாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் உட்பட மொத்தம் 7 நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு எல் நினோ காலநிலை நிகழ்வு காரணமாகத் தமிழ்நாடு இயல்பான மழைப்பொழிவைப் பெறத் தவறியுள்ளது.
மேலும், காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடகாவிலும் பருவமழை பொய்த்ததால், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் உருவானது.
‘எல் நினோ’ தாக்கம் ஆய்வு: வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
