முதலாவது சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாலோசனை அமைப்புமுறைக் கூட்டம் ஜூன் 9, 10 ஆகிய நாட்களில் இலண்டன் மாநகரில் நடைபெற்றது. இரு தரப்புகளும் கட்டுக்கோப்புக்குள் நின்று தொடர்புடைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஒத்த கருத்துக்களை எட்டும் வகையில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன.
ஜூன் 5ஆம் நாளன்று சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டிய நெடுநோக்கு ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தும் வகையில் இந்த முக்கியக் கலந்தாலோசனை நடைபெற்றது. கடந்த 2 நாட்களில், சீனாவும் அமெரிக்காவும் வெளிப்படையாகவும் ஆழமாகவும் பேச்சுவார்த்தையை நடத்தின.
இரு நாடுகளின் அரசுத் தலைவர்களும் தொடர்புகொண்ட போது உருவாக்கியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தவும், ஜெனீவாவில் நடைபெற்ற பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தையின் சாதனைகளை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பும் உடன்பாட்டை எட்டின. இக்கூட்டத்தில் இரு நாடுகளின் ஒன்றுக்கு ஒன்றுடனான பொருளாதார மற்றும் வர்த்தக சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் புதிய முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.