மேற்கு ஆசியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, அமெரிக்க நேரப்படி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணி) ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
“மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முயற்சிக்கு அளிக்கப்பட்ட சக்திவாய்ந்த பதிலடியே இந்த வான்வழித் தாக்குதலாகும்” என்று Centcom தனது ‘X’ சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ஈரானில் மீண்டும் அமெரிக்க விமானப்படை தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் மேகம்
