பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இரு தரப்பினரும் தேதியை இறுதி செய்ய முயற்சிப்பதாகவும் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
“இந்தியப் பிரதமர், ஜெலென்ஸ்கியை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். இரு தரப்பினரும் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நிச்சயமாக இந்தியா வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது எங்கள் இருதரப்பு உறவில் ஒரு பெரிய சாதனையாக இருக்கும். இருதரப்பிற்கும் ஒத்துவரும் தேதியை இறுதி செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம்,” என்று உக்ரைனின் தேசியக் கொடி தினத்தன்று ANI இடம் பேசிய போலிஷ்சுக் கூறினார்.
ரஷ்யாவுடனான போருக்கு இடையே பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருகிறார் உக்ரைன் அதிபர்
