அணை கட்டும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

மேகதாது மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் செயலைக் கண்டித்து திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது ஆற்று நீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது விவசாய விலை பொருளுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் கர்நாடகா அரசு மேகதாதுவிலும், கேரளா அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கமிட்டனர்.

You May Also Like

More From Author