தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இறுதியாக வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 72.09% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொகுதி வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் :
1. திருவள்ளூர் – 68.31%
2. வட சென்னை – 60.13%
3. தென் சென்னை – 54.27%
4. மத்திய சென்னை – 53.91%
5. ஸ்ரீபெரும்புதூர் – 60.21%
6. காஞ்சிபுரம் – 71.55%
7. அரக்கோணம் – 74.08%
8. வேலூர் – 73.42%
9. கிருஷ்ணகிரி – 71.31%
10. தருமபுரி – 81.48%
11. திருவண்ணாமலை – 73.88%
12. ஆரணி – 75.65%
13. விழுப்புரம் – 76.47%
14. கள்ளக்குறிச்சி – 79.25%
15. சேலம் – 78.13%
16. நாமக்கல் – 78.16%
17. ஈரோடு – 70.54%
18. திருப்பூர் – 70.58%
19. நீலகிரி – 70.93%
20. கோயம்புத்தூர் – 64.81%
21. பொள்ளாச்சி – 70.70%
22. திண்டுக்கல் – 70.99%
23. கரூர் – 78.61%
24. திருச்சிராப்பள்ளி – 67.45%
25. பெரம்பலூர் – 77.37%
26. கடலூர் – 72.28%
27. சிதம்பரம் – 75.32%
28. மயிலாடுதுறை – 70.06%
29. நாகப்பட்டினம் – 71.55%
30. தஞ்சாவூர் – 68.18%
31. சிவகங்கை – 63.94%
32. மதுரை – 61.92%
33. தேனி – 69.87%
34. விருதுநகர் – 70.17%
35. ராமநாதபுரம் – 68.18%
36. தூத்துக்குடி – 59.96%
37. தென்காசி – 67.55%
38. திருநெல்வேலி – 64.10%
39. கன்னியாகுமரி – 65.46%
மொத்தம் – 69.46%