சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஜுன் 30ஆம் நாள் பிற்பகல் 6ஆவது பயிலரங்கு நடத்தியது. கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இப்பயிலரங்கிற்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையில், கட்சியின் தத்துவப் புத்தாக்கம் பற்றிய புரிந்துணர்வைத் தொடர்ந்து ஆழமாக்கி, புதிய காலத்தின் புதிய பயணத்தில் மேலதிக தத்துவப் புத்தாக்கச் சாதனைகளைப் பெற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
சீனாவின் சூழ்நிலைக்கும் கால ஓட்டத்துக்கும் ஏற்ப மார்க்சிஸத்தை தகவமைப்பதில் புதிய நிலையை உருவாக்குவது என்பது, தற்போதைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெருமிதமான வரலாற்றுப் பொறுப்பாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசத்தின் வெற்றிக்கு மார்க்சிஸம் பயனளித்துள்ளது. குறிப்பாக, சீனச் சூழ்நிலை மற்றும் காலத்தின் தேவைகளுக்கு இணங்க அது தகவமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸத்தின் ஆன்மாவையும் சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாட்டையும் எவ்விதத்திலும் கைவிடக் கூடாது. இவை, தத்துவப் புத்தாக்கத்தின் அடிப்படை மற்றும் முன்நிபந்தனையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.