சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக தகவல் 

2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி மிக சிறப்பாக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பெரும்பான்மையை எட்டாததால், சந்திரபாபு நாயுடுவின் டிடிபி மற்றும் நிதிஷ் குமாரின் ஜேடியு ஆகியவை கிங் மேக்கர்களாக மாறியுள்ளன.
சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அந்த கூட்டணி கட்சிகள் தான் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியும்.
இந்நிலையில், சந்திரபாபு பாஜக கூட்டணியிலேயே நீடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
NDA கூட்டணியிலேயே தொடர்ந்து இருப்பதற்கு சந்திரபாபு நாயுடு உறுதி பூண்டுள்ளளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You May Also Like

More From Author