2025-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5-7% வளர்ச்சியடையும்  

Estimated read time 1 min read

இன்று நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு, 2025ஆம் நிதியாண்டில்(FY25) உண்மையான GDP வளர்ச்சி 6.5-7% இருக்கும் என்று கணித்துள்ளது.
“கன்சர்வேடிவ் முறையில் 6.5-7 சதவிகிதம் உண்மையான ஜிடிபி வளர்ச்சி இருக்கும் சர்வே கணித்துள்ளது. அபாயங்கள் சமநிலையில் உள்ளன. சந்தை எதிர்பார்ப்புகள் அதிக அளவில் உள்ளன” என்று 2023-24 பொருளாதார ஆய்வு கூறுகிறது.
பொருளாதாரத்தின் கண்ணோட்டம் பிரகாசமாக இருப்பதாகவும், 2023ஆம் நிதியாண்டில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதார வளர்ச்சியின் வேகம் 2024ஆம் நிதியாண்டு வரை நீதித்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
“மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டதனால், உலக பொருளாதார சவால்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்தது” என்று அந்த ஆய்வு கூறுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author