காட்டு யானைகளை வெடி வெடித்து விரட்டும் பணி தீவிரம்!

தென்காசி அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வெடி வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியை ஒட்டியுள்ள பண்பொழி, வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட விவசாய பகுதிகளில், காட்டு யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பொதுமக்கள் புகாரின் பேரில், காட்டு யானைக் கூட்டங்களை வெடி வெடித்து வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டும் முயற்சியானது பெரும் சவாலாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author