கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதியளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தா கலாச்சார இளைஞர் மைய திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கர்நாடகாவின் வளர்ச்சியுடன் இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றும், மாநிலத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் பிரதமர் மோடிக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
