வரலாற்றுச் சிறப்புமிக்க 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவின் அகமதாபாத் நகரம் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின் முதல் கட்டம் தொடங்குகிறது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில், காமன்வெல்த் போட்டிக்கான அதிகாரப்பூர்வக் கொடி மற்றும் போட்டிக்கான சிறப்பு செங்கோல் ஆகியவை அகமதாபாத் நகரத்தின் பிரதிநிதிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுகின்றன.
இதன் மூலம் அடுத்த காமன்வெல்த் தொடரை நடத்தும் வரலாற்றுப் பொறுப்பு இந்தியாவின் வசம் அதிகாரப்பூர்வமாக வந்து சேர்கிறது.
2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் அகமதாபாத்! கிளாஸ்கோ நிறைவு விழாவில் கொடி ஒப்படைப்பு
