தங்கம் விலை இன்று குறைந்தது..!!

Estimated read time 1 min read

அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பதும், அமெரிக்காவின் பத்திர வருவாய் உயர்ந்து வருவதும் தங்கம் விலை ஏற்றம் காணாததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கம் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறிவருகின்றனர். இருப்பினும் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

எனினும், இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவிருக்கிற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவு தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேற்காசிய போருக்கு பிறகு உலக பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவி வருவதால், தங்கம் விலை தற்போதைக்கு பெரிய அளவில் குறையாது என்கின்றனர் நிபுணர்கள்.

கடந்த சில நாட்களாக வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்தாலும், பல்வேறு துறைகளில் வெள்ளியின் தேவை அதிகம் இருப்பதால் அதன் விலையும் வரும் நாட்களில் ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படும் என்கின்றனர்.

ஆபரணத் தங்கம் விலை இன்று (ஆகஸ்ட் 01) சற்று குறைந்துள்ளது.

நேற்று ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.105,760-க்கும் விற்பனையாகிறது.

அதே போல் 5வது நாளாக வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கு 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது

You May Also Like

More From Author