இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. சிம் கார்டுகளால் இயக்கப்படும் மொபைல் போன்கள் காரணமாக மனிதர்களுக்கு உண்டான தொடர்பில் முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. சிம் கார்டை ஆக்டிவேட் செய்வதன் மூலமாக உங்களுக்கு மொபைல் எண் கிடைத்து விடும். இந்தியாவில் பயணங்களுக்கு கொடுக்கப்படும் மொபைல் எண் 10 இலக்கங்களை கொண்டிருக்கும்.
உங்களுடைய மொபைல் எண்+91 என்று தொடங்குவது ஏன் தெரியுமா? இந்திய நாட்டின் குறியீடு தான் இது. அனைத்து நாடுகளுக்கும் இது போன்ற ஒரு தனிப்பட்ட குறியீடு இருக்கும். அதேசமயம் இந்தியாவில் 6,7,8,9 என்ற இலக்கங்களுடன் மட்டுமே மொபைல் எண்கள் வரும். மற்ற எண்களில் தொடக்க எண்கள் இருக்காது. 0,1,2,3,4,5 என ஆரம்பிக்காமல் ஏன் 9,8,7,6 என ஆரம்பிக்கிறது என சந்தேகம் எழலாம். அதற்கான பதிலை தெரிந்து கொள்வோம். 0 என்ற எண் எஸ்டிடி கோடுகளுக்கும், 1 என்ற எண் அரசு சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. 2,3,4,5 ஆகிய எண்கள் தரைவழி தொலைபேசிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதன் காரணமாகவே செல்போனில் 9,8,7,6 என தொடங்குகின்றது.