ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கொளப்பள்ளி சரகம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொளப்பள்ளி சரகம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று மிகுந்த கம்பீரத்துடன் உலா வந்துள்ளது.

சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் காட்டு யானை சென்ற நிலையில், இதுகுறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You May Also Like

More From Author