சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி டிசம்பர் 31ஆம் நாள் முற்பகல், புத்தாண்டுக்கான தேநீர் விருந்தை நடத்தியது. ஷி ச்சின்பிங், லீ ச்சியாங், சாவ் லேஜீ, வாங் ஹுநிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள், பல்வேறு ஜனநாயக கட்சிகளின் பிரமுகர்கள், அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரமுகர்கள், பெய்ஜிங்கிலுள்ள பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் முதலியோர் இவ்விருந்தில் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றனர்.
