அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்ற நிலைமை தீவிரமாகி வருகிறது. 7ம் நாள் அதிகாலை பாகிஸ்தானிலுள்ள இலக்குகள் மீது இந்தியா, ராணுவ தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் பதில் நடவடிக்கைகள் மேற்கொண்டது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 7ம் நாள் கூறுகையில், சீனா, இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு வருத்தத்தையும், தற்போதைய நிலைமைக்கு கவலையையும் தெரிவிக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெயராத அண்டை நாடுகளாகவும், சீனாவின் அண்டை நாடுகளாகவும் உள்ளன. அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது.
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பும், அமைதி மற்றும் நிதானத்துக்கு முக்கியத்துவம் அளித்து, கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு, நிலைமையை தீவிரமாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.