திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்றார் நித்யா மேனன்  

2022ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் கதாநாயகியாக நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த பாடலான “மேகம் கருக்காதா” பாடலுக்கு சிறந்த நடன வடிவமைப்பிற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை நடன இயக்குனர்கள் ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் பெறவுள்ளனர்.
இதற்கிடையே சிறந்த படமாக மலையாளத்தின் ஆட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, சிறந்த நடிகராக “காந்தாரா” ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் முக்கியமான விருதுகளை தென்னிந்திய சினிமாக்கள் வென்றுள்ளது.

You May Also Like

More From Author