ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச்சின்னம் அமைக்க வலியுறுத்தல்!

திருச்சியில் ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச்சின்னம் அமைக்கக் கோரி தமிழ்நாடு அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தமிழ்சூரியன் தலைமை தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அவர், அகமுடையார் சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதில் பசும்பொன் அறக்கட்டளை தலைவர் மலைச்சாமி, அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் தலைவர் ராவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

More From Author