ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் இந்த கூட்டணி 164 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
இதனை தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆந்திர துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேசுக்கு மனிதவளத்துறை, ஐ.டி. மற்றும் தகவல் தொடர்புத்துறை வழங்கப்பட்டுள்ளது.