சீபூத்தீக் குடியரசு, ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியிலும் ஏடன் வளைகூடாவின் மேற்கிலும் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் பங்கேற்கும் முக்கிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
ஆப்பிரிக்காவின் முதலாவது ‘லுபன் பட்டறை’ என்ற தொழில்முறை கல்வி மையம் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி மையத்தின் துவக்க விழாவில் லுபன் வருவாரா என்று 2018ஆம் ஆண்டு சீபூத்தியில் லுபன் பட்டறையை உருவாக்க ஆயத்தம் செய்தபோது, அங்குள்ள பணியாளர் ஒருவர் கேட்டார்.
இந்தக் கேள்வி இன்று கூட, தியன்ஜின் இருப்புப்பாதை தொழில்திறன் மற்றும் தொழில்முறை கல்லூரியின் ஆசிரியர் யாங் சியௌடானின் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளனது.
லுபன் என்பவர், பண்டைய சீனாவில் தலைசிறந்த கலைவினைஞர் ஆவர். அவரின் பெயரில் நிறுவப்பட்ட தொழில்முறை கல்வி மையம் மூலமாக கல்வி அனுபவங்கள் மற்றும் உபகரணங்களை சீபூத்திக்குக் கொண்டு வரப்படும்.
உள்ளூர் இளைஞர்கள் தொழில்திறனை வளர்த்து கொள்ள உதவியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்க, ஆப்பிரிக்காவில் 10 லுபன் பட்டறைகளை அமைப்பதாக 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அறிவித்தார்.
சீபூத்தியைச் சேர்ந்த இளைஞர் லிபன் ஃபோவட் ஓஸ்மன், குழந்தையாக இருந்தபோது, இருப்புப்பாதையின் பக்கத்தில்கால்பந்து விளையாடினார். அதேவேளையில், அவரின் மனத்தில் இருப்புப்பாதை தொடர்பான கனவு ஒன்று இருந்தது. லுபன் பட்டறையில் இருப்புப்பாதைத் துறையின் மாணவர்களைச் சேர்ப்பதை அவர் கேட்டறிந்தார்.
உள்ளூர் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்து இருந்தனர். ஓஸ்மனும் அவர்களில் ஒருவர். இறுதியில் முதல்கட்ட மாணவர் சேர்க்கையில் ஓஸ்மன் உள்ளிட்ட 24 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள 20க்கும் அதிகமான நாடுகளில் ஒத்துழைப்புடன் ‘லுபன் பட்டறை’ நிறுவப்பட்டுள்ளது.
ஓஸ்மனை போலவே மேலதிக இளைஞர்கள் தனது கனவு நனவாக்கும் பாதையில் காலடியெடுத்து வைக்கிறார்கள். தொழில்திறன் கல்விக்கான சர்வதேச பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேடையான ‘லுபன் பட்டறை’ உலகளவில் மேலதிக மக்களிடையே அறியப்பட்டு வருகிறது.