2023ஆம் ஆண்டில் சீனா விரைவு அஞ்சல் சேவையில் அனுப்பும் பார்சல்களின் எண்ணிக்கை அக்டோபர் 23ஆம் நாளன்று 10ஆயிரம் கோடியை எட்டியது என்று தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நிகழாண்டில் 39 நாட்களுக்கு முன்னதாகவே 10ஆயிரம் கோடி பார்ச்ல்கள் என்ற இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல், ஒருவ்வொரு மாதத்திற்கும் ஆயிரம் கோடிக்கும் மேலான பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதோடு, விரைவு அஞ்சல் சேவை மூலம் கிடைக்கும் சராசரி மாத வருமானம் 9000 கோடி யுவானை எட்டி, வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.