ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை வளர்ச்சி பற்றிய விவாதம்

 

போஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் 28ஆம் நாள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் வளர்ச்சி பற்றி விவாதம் நடத்தப்பட்டது.
புள்ளிவிவரங்களின்படி 2022ஆம் ஆண்டு இறுதிவரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளில் சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகை 5713 கோடி அமெரிக்க டாலருக்கு அதிகமாகும். தவிரவும் 4 இலட்சத்து 21 ஆயிரம் வேலை வாய்ப்புகள் இந்த நாடுகளில் உருவாக்கப்பட்டன.
மேலும் சீனா ஆசியான் அமைப்பின் 10 நாடுகள், சிலி, நியூ சிலாந்து ஆகிய 18 நாடுகளுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான தடையில்லா வணிக உடன்படிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒத்துழைப்பு விரிவாக்கம், தரம் உயர்வு, பயன் அதிகரிப்பு ஆகிய 3 துறைகளில் தொடர்புடைய நாடுகள் ஈடுபட்டு, உலகளவில் உயர தரமான தாராள வர்த்தக வலைப்பின்னலை உருவாக்க வேண்டும் என்று நடப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author