இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பொருளாதார குறியீடுகளில் நேர்மறையான மாற்றங்களுடன், 2023ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய சீனா நம்பிக்கை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களில், சீனப் பொருளாதாரம் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கீழ்நோக்கிய அழுத்தத்தை எதிர்நோக்கியது. முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 91.3 லட்சம் கோடி யுவானை தாண்டி, கடந்த ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.
இது சீனப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலைமை மீண்டு வருவதைக் காட்டி, சமூகத்துக்கு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இவ்வாண்டின் கடைசி காலாண்டிலும் பொருளாதாரம் சீராக வருவதுடன், நடப்பாண்டுக்கான வளர்ச்சி இலக்கை நிறைவேற்றுவதில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என்று தேசிய புள்ளிவிவர பணியகத்தின் துணைத் தலைவர் ஷெங் லையுன் வலியுறுத்தினார்.
மேலும், முன்னர் வெளியிடப்பட்ட தொடர்ச்சியான ஆதரவான கொள்கைகள் நான்காவது காலாண்டில் நடைமுறைக்கு வந்து வருகின்றன.