மத்திய நிதி பணி கூட்டம் அக்டோபர் 30 மற்றும் 31ஆம் நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லீ ச்சியாங், ட்சாவ் லெஜி, வாங் ஹுனிங், ட்சாய் ச்சி, டிங் சூக்ஸியாங், லீ சி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஷிச்சின்பிங் தனது உரையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நிதிப் பணிகளைத் தொகுத்து, உயர்தர நிதி வளர்ச்சி எதிர்கொள்ளும் நிலைமையை ஆய்வு செய்து, நடப்பு மற்றும் எதிர்கால நிதிப் பணிக்கு அவர் ஏற்பாடுகளை செய்தார்.
நிதி என்பது தேசிய பொருளாதாரத்தின் இரத்தமும் தேசிய மைய போட்டி ஆற்றலின் முக்கிய பகுதியும் ஆகும். சீனாவின் நவீனமயமாக்கத்துடன் வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கு வலுவான ஆதரவை வழங்கும் வகையில், நிதி கண்காணிப்பைப் பன்முகங்களிலும் வலுப்படுத்தி, நிதி அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும். நிதி சேவைகளை மேம்படுத்தி, அபாயங்களைத் தடுக்க வேண்டும். சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த நிதி வளர்ச்சிப் பாதையை உறுதியாகக் கடைப்பிடித்து, சீன நிதி துறையின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.