2024ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பு ஆணையத்தின் கூட்டம் நவம்பர் 5ஆம் நாள் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாக் உரைநிகழ்த்தி ஊடக புத்தாக்க தொழில்நுட்பத் துறையில் சீன ஊடகக் குழுமத்தின் வளரச்சியை வெகுவாகப் பாராட்டினார்.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஒளிபரப்புவதில் அறிவிப்பில் சீன ஊடகக் குழுமம் ஈட்டியுள்ள பெருமிதமான சாதனைகளை பாராட்டிய அவர் இரு தரப்புக்குமிடையே உள்ள பயனுள்ள ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய சீன ஊடகக் குழுமத்தின் ஒளிபரப்புப் பணி எண்ணிக்கை ரீதியிலும் தரம் ரீதியிலும் மிகவும் சிறந்ததாகும். 7700கோடி முறையான பரவல் பதிவு உருவாகி அற்புதமான சாதனையைப் பெற்றுள்ளது. இது குறித்து சீன ஊடகக் குழுமத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்றும் பாக் கூறினார்.