டெல்லி உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை கண்டுபிடிக்க வேண்டும் இல்லையெனில் மறுத்தேர்வு நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறி இருந்தது.
இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் திங்கள்கிழமை ஆஜராக முடியாது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ஜூலை 18ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.