NEET தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்: நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை  

நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக நடைபெறும் இந்த தேர்வில், ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு மற்றும் பயிற்சி மையங்களில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது போன்ற சர்ச்சைகள் எழுந்தன.
இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், தேர்வில் நடந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு சார்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு நீட் தேர்வின் சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

You May Also Like

More From Author