மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு பல மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழையும், குமரி, தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.