ரேடியோகிராஃப்களின் அடிப்படையில் ஒரு நபரின் பாலினத்தை கண்டறியும் இயந்திர கற்றல் முறையை பிரேசிலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அதாவது ஒருவரின் பல் எக்ஸ்ரே படங்கள் மூலம் அவரது பாலினத்தை இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கண்டறிந்துவிடுகிறது.
எக்ஸ்ரே படத்தின் தெளிவுத்திறன் நன்றாக இருந்து, அந்த எக்ஸ்ரே படத்தில் உள்ளவரின் வயது 16க்கு மேல் இருந்தால் அவரின் பாலினத்தை இந்த தொழில்நுட்பம் 96% துல்லியத்துடன் கணித்துவிடுகிறது.
16 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் பாலினத்தை இந்த அமைப்பால் துல்லியமாக கணிக்க முடியவில்லை.
இந்த கண்டுபிடிப்புகள் தடயவியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.